உலக கோப்பையை பெற்ற இந்திய அணிக்கு ஜெயலலிதா வாழ்த்து

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப். 4- உலக கோப்பையை பெற்ற இந்திய அணிக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக கோப்பை போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி அனைத்து எதிர் அணிகளையும் வீழ்த்தியதுடன் இறுதி போட்டியில் இலங்கையை வென்று உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளனர். இது மட்டும் அல்ல டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டி என அனைத்திலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்காக இந்திய அணிக்கும், கேப்டன் டோனிக்கும் சாதனை படைத்து வரும் தெண்டுல்கருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.