கடல்சார் படிப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

உலகம் முழுவதும் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய கடல்சார் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் மவுசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களும் கடல்சார் படிப்புகளை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. சென்னையில் உள்ள ஏஎம்இடி கடல்சார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. * இங்கு பிஇ, பிஎஸ்சி, ஜிஎம்இ ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின் றன. இதில் மரைன் இன்ஜினியரிங் (பிஇ), நாட்டிகல் சயின்ஸ் (பிஎஸ்சி), கிராஜுவேட் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பிஇ-நேவல் ஆர்க்கிடெக்சர் அண்ட் ஆப்ஷோர் இன்ஜினியரிங், பிஇ-மரைன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பிஇ-பெட்ரோலியம் அண்ட் ஆப்ஷோர் இன்ஜினியரிங், பிஇ-ஹார்பர் இன்ஜினியரிங் அண்ட் ஆப்ஷோர் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. * மேனேஜ்மென்ட் புரோகிராம் படிப்பில் பிபிஎம்-ஷிப்பிங், எம்பிஏ- ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட், எம்பிஏ-ஷிப்பிங் பைனான்ஸ், எம்பிஏ-மரைன் ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட், எம்பிஏ-க்ரூஸ் ஷிப் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. * முதுகலை பிரிவில் எம்டெக்- மரைன் இன்ஜினியரிங் மேனேஜ்மென்ட், எம்எஸ்சி ப்ளீட் ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட், மரைன் பயோ டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. * இதுதவிர வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்போடு நாட்டிகல் சயின்ஸ் (எச்என்டி), மரைன் இன்ஜினியரிங் (எச்என்டி), பிஎஸ்சி-மரைன் பிசினஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ், பிஎஸ்சி-க்ரூஸ் ஷிப் மேனேஜ்மென்ட், எம்எஸ்சி- ஆப்ஷோர் ப்ளோட்டிங் சிஸ்டம்ஸ், எம்எஸ்சி-மரைன் டெக்னாலஜி ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அடிப்படை கல்வித்தகுதி, விண்ணப்பக்கட்டணம், தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட விவரங்களை www.ametuniv.ac.in என்ற இணையதளம் அல்லது 044-27444236 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்துகொள்ளலாம்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.