மத்திய அரசு ஸ்காலர்ஷிப்புடன் 6 மாத தொழில்நுட்ப படிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

நாட்டில் தொழில் வளத்தை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கேற்ப கல்வித்துறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மூலம் கூடுதல் தகுதிப் படிப்புகள், ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களுக்கு உதவித்தொகை, சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில் பயோஇன்பர்மேட்டிக்ஸ் இண்டஸ்ட்ரியல் டிரெய்னிங் புரோகிராம் (பிஐஐடிபி) என்ற 6 மாத கால தொழில்நுட்ப படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. பிஇ, பிடெக், எம்எஸ்சி, எம்டெக் முடித்தவர்கள் அல்லது பயோஇன்பர்மேட்டிக்ஸ் பாடத்தில் ஒரு வருட அட்வான்ஸ்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கல்வித்தகுதிகளை 2008க்கு பிறகு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்சம் 60 சதவீத மார்க்குடன் தேர்ச்சி பெற்றிருத்தல்அவசியம். சம்பந்தப்பட்ட துறையில் பெற்றுள்ள அதிகப்படியான கல்வித்தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். படிப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம்தோறும் ரூ.800 உதவித்தொகை வழங்கப்படும்.விண்ணப்பக்கட்டணமாக ரூ.250 ஐ ?Biotech Consortium India Limited? என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண்டும். டிடியின் மறுபக்கத் தில் விண்ணப்பதாரர் பெயர், ஆன்லைன் விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். www.bcil.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். அதன்பின்னர் விண்ணப்ப பதிவு சான்றை பதிவிறக்கம் செய்து அத்துடன் டிடி மற்றும் தேவையான கல்விச்சான்றிதழ்களின் நகல் (சான்றொப்பம் பெற்றவை) இணைத்து ?Mr.Manoj Gupta, Deputy Manager, Biotech Consortium India Ltd, 5th Floor, Anuvrat Bhawan, 201DeenDayal Upadhyaya Marg, New Delhi110002?என்ற முகவரிக்கு வரும் ஏப்.10க்குள் அனுப்ப வேண்டும். இதர விவரங்களை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.