பாராமெடிக்கல் கோர்ஸ்களுக்கு மாணவர் சேர்க்கை ஆரம்பம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. எம்.பார்ம், எம்எஸ்சி நர்சிங், எம்பிடி (பிசியோதெரபி), எம்எஸ்சி மெடிக்கல் பிசிக்ஸ் ஆகிய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண், இனச்சுழற்சி மற்றும் அரசு விதிகளின் கீழ் சேர்க்கை நடத்தப்படும்.இப்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.1000ஐ ?The Secretary, Selection Committee, Chennai 600010? என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட டிடியாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. www.tnhealth.org அல்லது www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் டிடி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல் (சான்றொப்பம் பெறப்பட்டவை) ஆகியவற்றை இணைத்து ?The Secretary , Selection Committee, No.162, Periyar EVR High Road, Kilpauk, Chennai10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதர விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.