கல்வித்துறைக்கு தமிழகத்தில்தான் அதிக நிதி-மு.க.ஸ்டாலின்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

விழுப்புரம், பிப்.7- விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 84 புதிய வகுப்பறை கட்டிடங்கள், அண்ணா பல்கலைக்கழக விழுப்புரம், திண்டிவனம் பொறியியல் கல்லூரிகளின் புதிய கட்டிடங்கள், பல்வேறு திட்டங்களின் வாயிலாக கட்டப்பட்ட கட்டிடங்களின் திறப்பு விழா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல், வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழக உயர்கல்வி, சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி வரவேற்றார். விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளின் புதிய கட்டிடங்கள், பல்வேறு திட்டங்களின் வாயிலாக கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தும், வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதி வழங்கியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசியதாவது:- உங்கள் அன்போடும், ஆதரவோடும் நடைபெறுகிற தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நேரத்தில் கொடுத்த உறுதிமொழிகள், வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். தேர்தல் நேரத்தில் வழங்காத உறுதிமொழிகளையும் வாக்குறுதிகளையும் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார். 2011-ல் தேர்தல் வரப்போகிறது. தெளிவான உறுதியோடு சொல்கிறேன் 6-வது முறையும் கருணாநிதி தான் முதல்-அமைச்சராக வருவார். இந்த ஆட்சி தொடர வேண்டும். மீண்டும் கருணாநிதி ஆட்சி தான் வரும். யாரும் கவலைப்பட வேண்டாம். திட்டங்கள் தொடர்ந்து நிறைவேறும். அப்படிப்பட்ட நிலையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கல்வித்துறைக்கு அதிக நிதி வரக்கூடிய நாட்டில் பிறந்த நீங்கள் நல்ல முறையில் கல்வியை கற்கக்கூடிய சூழ்நிலையை பெற வேண்டும். எத்தனையோ துறைகளில் திட்டங்களை தீட்டி கருணாநிதி சாதனை படைத்து வந்தாலும் பல மாநிலங்களை ஒப்பிட முடியாத அளவிற்கு கல்வியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காக கல்வித்துறைக்கு அதிக நிதி கொடுத்ததில் தமிழகம் முதலிடத்தில் வகிக்கிறது. இந்த சிறப்பான கல்வியை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டு நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமையை தேடித் தர வேண்டும் என்று நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆதிசங்கர், எம்.எல்.ஏ.க்கள் புஷ்பராஜ், உதயசூரியன், கண்ணன், திருநாவுக்கரசு, அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, மாவட்ட கல்வி அலுவலர் பூபதி, விழுப்புரம் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்குழு தலைவர் ராதாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் மைதிலி ராஜேந்திரன், விழுப்புரம் உதவி கலெக்டர் பிரியா, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிரபலா ஜெபிகரா ராஸ் உள்பட பள்ளி ஆசிரியைகள், மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடாசலம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பழனிச்சாமி தொகுத்து வழங்கினார். விழாவில் எக்சலன்ட் கன்ஸட்ரக்ஷன்ஸ் உரிமையாளர் என்ஜினீயர் திரிசங்கு, பி.எஸ்.கே. குழும உரிமையாளர்கள் பெரியசாமி, தங்கவேலு, பழனிச்சாமி, தென்னரசு, அருண்குமார், அசோக் குமார், விழுப்புரம் மாவட்ட தளபதி நற்பணி மன்ற செயலாளர் செல்வராஜ், விசாலாட்சி பல் மருத்துவமனை மேலாண் இயக்குனர் டாக்டர் ராஜசிகாமணி, மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் சிட்டிபாபு, நகர தி.மு.க. செயலாளர் பாலாஜி, விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் நிறுவன தலைவர் எஸ். எம். அப்பாஸ், பஞ்சமா தேவி ஊராட்சிமன்ற தலைவர் பிரபாகரன், துணைத்தலைவர் அம்பிகா மகாலிங்கம், வழுதரெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராயர், உறுப்பினர் பழனி, ஒன்றிய கவுன்சிலர்கள் வசந்தவேல், தங்கம், மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், கள்ளக்குறிச்சி தொழில் அதிபர் சுப்புராயலு, ரவி, ரவிசெல்வம், மேலமங்கலம் எம்..செந்தில், உதயகுமார், உளுந்தூர்பேட்டை ஜெயக்குமார், பெரிய செவலை கணபதி, திரு வெண்ணை நல்லூர் மோகன், ஏமப்பூர் முருகன், பூசாரிப் பாளையம் மெகிட்டி, விழுப்புரம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரேம், வளவனூர் சேர்மன்சம்பத், துணை சேர்மன் சரபோஜி, திருவெண்ணைநல்லூர் ஒன்றிய செயலாளர் துரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் சேகர், கல்வி தாளாளர் கோதகுமார் உள்பட ஏராமானோர் கலந்து கொண்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.