மாதுரியும் அசினும் ஒண்ணா...? சல்மானை வேட்டையாடும் பிரஸ்!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சல்மான் கானின் சட்டை பட்டன் போலாகிவிட்டார் அசின். (ஆனால் எந்நேரமும் அதை அவிழ்த்தபடிதான் போஸ் கொடுக்கிறார் பாய். அது வேறு விஷயம்) இந்த நெருக்கம் இரண்டு பேருக்கும் பொதுவாக இருக்கிற வரை பிரச்சனை இல்லை. அடுத்தவரை ஒப்பிடுகிற போதுதான் அவலட்சணமாகிறது என்று கொதிக்கிறார்கள் மும்பை வாலாக்கள்! என்னவாம்? சல்மான் கான்- மாதுரி தீட்சித் நடித்த \'ஹம் ஆப்கே ஹை கோன்\' என்ற படம் பாலிவுட்டில் வெளிவந்த மறக்க முடியாத வெற்றிப்படம். இப்பவும் இந்த காதல் படத்தை விழுந்து விழுந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மாதுரியை அசினுடன் ஒப்பிட்டு பேசிவிட்டார் சல்லு பாய். தற்போது அசினுடன் ஒரு படத்தில் நடித்து வரும் சல்மான், இவருடன் மிக நெருக்கமாகவும் இருக்கிறார். ஆனால் இது மீடியாவின் வெட்டிப் பேச்சு. நானும் அவரும் நல்ல பிரண்ட்ஸ் என்றே பூசி மெழுகி வருகிறார் அசின். இந்த நேரத்தில் தன் அன்பை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என்று அசினை மாதுரிக்கு இணையாக ஒப்பிட்டு பேட்டியளித்துவிட்டாராம் பாய். அவ்வளவுதான்... அதெப்படி சொல்லப் போச்சு என்று மல்லுகட்டிக் கொண்டிருக்கிறார்கள் செய்தியாளர்கள். தனது கருத்துக்கு இப்படி ஒரு எதிர்ப்பு வரும் என்பதை யூகிக்காத சல்மான், நான் அந்த அர்த்தத்தில் சொல்லலே என்று பல்டி அடித்திருக்கிறார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.