புதிய அரசு அமைந்த பின்பு பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப். 11- பிளஸ்-2 தேர்வு முடிவுகள் புதிய அரசு அமைந்த பின்பு வெளியாகும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். . தமிழ்நாடு முழுவதும் 7 லட்சத்து 23 ஆயிரத்து 545 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். கடந்த ஆண்டைவிட கூடுதலாக 33 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர். தனித் தேர்வர்களாக 57 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி இப்போது முடிந்து விட்டது. இதையடுத்து மதிப்பெண்களை பதிவு செய்வது, சரிபார்ப்பது, மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் 4 வாரங்கள் நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியிடத் தயாரான பிறகு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடனோ அல்லது புதிய அரசு அமைந்த பின்போ வெளியிடப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மே 13-ந்தேதி நடக்கிறது. தேர்தல் முடிவுக்குப் பின் புதிய அரசு அமைந்த ஓரிரு நாளில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.