அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் வளைகுடா நாடுகளுக்கு விஜயம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

வாஷிங்டன்,ஏப்;11- அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பாதுகாப்பு ஆலோசகர் டொம் டூனிலான் வளைகுடா நாடுகளுக்கு விஜயம் செய்கிறார். பஹ்ரைன், ஏமன் ஆகிய நாடுகளில் தொடர்ந்தும் அரசுக்கெதிராக மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. இது குறித்து விவாதிப்பதற்காகவும், வளைகுடா நாடுகளிடையே ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிப்பதற்காகவும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லவுள்ளார். இது குறித்து வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பஹ்ரைன், ஏமன் ஆகிய நாடுகளில் அரசுக்கெதிராக மக்கள் கிளர்ச்சி தீவிரமடைந்துள்ளது. அங்கு அரசுக்கெதிராக மக்கள் கிளர்ச்சி தீவிரமடைந்து வருவதால், நிரந்தர அரசியல் தீர்வு எட்டவும், இது குறித்து பிராந்திய ஒத்துழைப்பினை நல்கவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய ஆலோசகர் டொம் டூனிலான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லவுள்ளார். அவர் இந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கவுள்ளார். மேலும் ஜனாதிபதி ஒபாமாவின் தூதராகவும் இவர் , முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என வெள்ளை மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.