மிடில் ஆர்டர் வரிசையில் சிறந்த பார்ட்னர் ஷிப் தேவை; டோனி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மிடில் ஆர்டர் வரிசையில் சிறந்த பார்ட்னர் ஷிப் தேவை; டோனி சென்னை, பிப். 15- உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் இன்று பயிற்சி பெற்றனர். முன்னதாக இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் மிடில் ஆர்டரில் சிறந்த ஜோடி (பார்ட்னர் ஷிப்) அமையவில்லை. பின்னர் வந்த வீரர்கள் நன்றாக ஆடினார்கள். சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக வீசியதால் 38 ரன்னில் வெற்றி பெற்றோம். மிடில் ஆர்டர் வரிசையில் சிறந்த பார்ட்னர் ஷிப் தேவை வீரர்களில் ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். மிடில் ஆர்டர் வரிசை எப்போதும் மோசமாக இருக்காது என்று நினைக்கிறேன் என்றாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசத்தை எதிர்கொள்கிறோம். நான் கடந்த முறை அங்கு விளையாடியபோது பனிபொழிவு அதிகமாக இருந்தது. இதனால் அங்கு பனி பொழிவு மிகவும் முக்கியபங்கு வகிக்கும். 11 பேர் கொண்ட அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதை கூற இயலாது. ஆனால் ஆடுகளத்தின் (பிட்ச்) தன்மை, திறமையின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு இருக்கும். நியூசிலாந்துக்கு எதிரான நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் தெண்டுல்கர் ஆடுவார். ஜாகீர்கானுக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் லோசானது தான். பயப்படும்படி இல்லை. வங்காள தேசத்துக்கு எதிராக 19-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் அவர் விளையாடுவார். சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து எதுவும் தெரியாது. பொதுவாக இந்திய ஆடு களங்கள் சுழற்பந்துக்கு ஏற்ற வாறு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். டோனியிடம் நிருபர்கள், வீரர்கள் தேர்வில் யாருக்கு வாய்ப்பு என்றே பெரும்பாலும் கேட்டனர். 11 பேர் கொண்ட அணியில் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது தொடர்பாக 25 நிமிடங்கள் கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.