சென்னையில் அம்பேத்கார் 120-வது பிறந்த நாள் விழா

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,ஏப்;14- சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 120-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலைகள் அணிவித்தும், மலர் தூவியும் வணங்கி மரியாதை செலுத்தினர். மக்கள் தேசம் - பறையர் பேரவை மக்கள் தேசம் கட்சி, பறையர் பேரவை அமைப்பு சார்பில் அதன் நிறுவனர் - தலைவர் சாத்தை ?. பாக்கியராஜ் தலைமையில், மாநில துணை தலைவர் வேளச்சேரி ஜி.என்.சுந்தர். டி. பிரேம்ஜி, அடையார் ஜே.கே. விக்டர், பாலன், டி.மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி, வணங்கி, மரியாதை செலுத்தினர். இதே நாளில் மாநில இளைஞரணி தலைவர் வழக்கறிஞர் A. ஆசைத்தம்பி தலைமையில் நெல்லையில் அம்பேத்கரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 120-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும், அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்களும் திரளாக வருகை தந்து, அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலைகள் அணிவித்தும், மலர் தூவியும் வணங்கி மரியாதை செலுத்தினர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தமிழக தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங்க், தென்சென்னை மாவட்ட தலைவர் கே.எஸ்.மோகன் உட்பட திரளான தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மயிலைப்பகுதி செயலாளர் ரூதர் சு. கார்த்திக் தலைமையில் திரளான தொண்டர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மயிலைபகுதி அமைப்பாளர் செ. இளையவேந்தன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பல்லவபுரம் நகர அமைப்பாளர் சிவகுமார், 17-வது வட்ட செயலாளர் ஆர். கமலக்கண்ணன் உள்ளிட்டோரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜனநாயக மக்கள் கட்சி ஜனநாயக மக்கள் சாட்சி சார்பில் அம்பேத்கரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சியின் நிறுவனர்-தலைவர் வழக்கறிஞர் ஆ. சிகாமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் எஸ். நீலகண்டன், பி. இளையராஜா, ராஜன், எஸ்.எம். பழனிவேல்ராஜன், பாலவேடு டி. சகாயம், உள்பட திரளான தொண்டர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.