மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் விரல்விட்டு என்னக்கூடியதில் முதல் மூன்று விரல்களில் பிடிபட்டுவிடுவார் நமது அபிமான மணிரத்னம் அவர்கள். பகல் நிலவு படத்தில் தனது வெற்றிக்கணக்கை தொடர்ந்த அவர் சற்று முன் வெளியான ராவணனில் சிறிது எதிர்பாராமல் வியாபாரரீதியில் தோல்வியை சந்தித்தார். மேலும் இதற்கு முந்தைய ஆயுத எழுத்து, இருவர் என வியாபாரரீதியில் தோல்வியை சந்தித்தாலும் அனைத்து படங்களுமே வருங்கால இயக்குனராகும் கனவோடு திரியும் மாணவர்களுக்கு மிகச்சிறந்த பாடமாக கருதப்படும் அளவுக்கு மிகச்சிறந்த திரைக்காவியங்கலாக இருக்கிறது. மேலும் இவர் இயக்கிய அஞ்சலி, ரோஜா, மௌன ராகம், நாயகன், அலைபாயுதே என வெற்றிப்படங்களின் எண்ணிக்கை மிக அதிகம், இவரின் படங்களினால் மக்களின் இதயங்களை மிக எளிதில் கட்டிவிடுவார். உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளராக விளங்கும் எ.ஆர். ரஹ்மான் இவரது சீடர் என்பது கூடுதல் அங்கீகாரம். எந்த படத்தை எடுத்தாலும் அதனை மிக கவனத்தோடும் வெறியோடும் கடின உழைப்போடும் தான் முடிப்பார். ராவணன் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்க இரவு பகலாக உழைத்து அதனால் இதயவலி ஏற்பட்டு சிறிது நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இருப்பினும் மிகச்சிறப்பாக அத்திரைப்படத்தை எடுத்து முடித்தார். ராவணனின் சிறிய முடங்களுக்குப்பிறகு மீண்டும் தனது அடுத்த மிகப்பிரம்மாண்ட படைப்பிற்கு தயாராகிவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கல்கியின் பொன்னியின் செல்வன் காவியத்தை அதாவது 120 காட்சிகள் கொண்ட திரைப்படமாக எழுதி வைத்துவிட்டார். இப்பொழுது அதை திரைப்படமாக்க அவர் இறங்கிவிட்டார். இதில் கமல், விக்ரம், அல்லது சூர்யா நடிக்க வாய்ப்புள்ளது, இசையை பற்றி கவலை இல்லை அனைவருக்கும் அபிமான எ.ஆர். ரஹ்மான் தான். மற்ற கலைஞர்களை தேடும் பணியில் மணிரத்னம் இறங்கியுள்ளார். இது காவியப்படம் ஆதலால் மிகுந்த பொருட்செலவுடன் தயாராக உள்ளது. மேலும் கூடுதல் தகவல் இக்காவியத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எந்திரனில் சுமார் 400 கோடிகளை மூட்டையில் அள்ளிய பிறகு சிறிய படங்களை தயாரிப்பதையும் சிறிய லாபங்களை பார்ப்பதில் சன் பிக்சருக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இதனால் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக மிகச்சிறந்த படத்தை தயாரிப்பதில் உறுதியாக இருப்பதும் செவி வழிச் செய்தி. என்ன இருந்தால் என்ன சிறப்பான படங்களை தமிழர்கள் இணைந்து உருவாக்குகிறார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய செய்திதான்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.