தமிழகத்தில் வாக்கு எண்ணும் 91 மையங்களில் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு; 3 அடுக்கு பாதுகாப்பு, 4 அடுக்காக மாற்றம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப்.16- தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளின் வாக்குகள் 91 மையங்களில் வைத்து எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 3 அடுக்கு பாதுகாப்பு, 4 அடுக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்களும் ஓட்டு எண்ணும் இடங்களில் பாதுகாப்பாக கொண்டுபோய் சேர்க்கப்பட்டு அறைகளில் வைத்து பூட்டப்பட்டு `சீல்\' வைக்கப்பட்டுள்ளன. ஓட்டும் எண்ணும் இடங்களில் முதலில் 3 அடுக்கு பாதுகாப்பு போட திட்டமிடப்பட்டிருந்தது. அது, தற்போது 4 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் அடுக்கு பாதுகாப்பு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சுற்றி இருக்கும். முதல் அடுக்கில் துணை ராணுவ படையினர் ஒரு அதிகாரி தலைமையில் 5 பேர் நிறுத்தப்படுவார்கள். துணை ராணுவ படையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் பயன்படுத்தப்படுவார்கள். 2-வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த 16 பேரும் துப்பாக்கியோடு நிறுத்தப்படுவார்கள். அவர்களில் ஒரு அதிகாரியும் இருப்பார். 3-வது அடுக்கில் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த 25 போலீசார் நிறுத்தப்படுவார்கள். இவர்கள் கண்ணீர் புகைகுண்டுகளும் தயார்நிலையில் வைத்திருப்பார்கள். 4-வது அடுக்கில் ஒரு டி.எஸ்.பி. தலைமையில், 3 இன்ஸ்பெக்டர்கள் இடம்பெற்ற உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டிருப்பார்கள். 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் இந்த போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஓட்டு எண்ணும் மையங்களில் இரவு நேரத்தில் ஒளியை கக்கும் ராட்சத மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாத காலத்திற்கும் ஒட்டு எண்ணும் இடங்களில் இந்த தீவிர பாதுகாப்பு இருக்கும். இவ்வாறு டி.ஜி.பி. போலாநாத் தெரிவித்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.