கருணாநிதி அரசின் சாதனைகளால் தெம்பு-திராணியோடு மக்களை சந்திக்கும் இயக்கம்; தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திண்டிவனம், பிப்.7- விழுப்புரம் மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் சாதனை மற்றும் நிதிநிலை விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர செயலாளர் கபிலன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:- நாம் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க போகிறோம். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது. மே மாதத்தில் தேர்தலை சந்திக்க போகிறோம். பொதுவாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆட்சிப்பொறுப்பேற்ற ஒரு ஆண்டு காலம் நிம்மதியாக இருக்க முடியும். ஒரு ஆண்டுக்கு பிறகு மக்களை சந்திக்க சென்றால் மக்கள் குறைகளை எடுத்துச் சொல்வது வழக்கம். ஆனால் 5-வது முறையாக நாம் ஆட்சிக்கு வந்த இந்த 4 1/2 ஆண்டு காலத்தில் , 5-வது ஆண்டை நெருங்கி செல்கிற சூழ்நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நாம் தெம்போடும், திராணியோடும், மக்களை சந்திக்கிறோம் என்றால் இதற்கு கலைஞர் ஆட்சியின் சாதனைகள் தான் காரணம். நான் இதை ஆணவத் தோடு கூறவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, தெம்போடும், திராணியோடும் மட்டும் அல்ல திமிரோடும் மக்களை சந்திக்கிற ஒரே இயக்கம் தி.மு.க. தான் என்பதை உறுதி படக்கூறிக்கொள்கிறேன். பொதுவாக தேர்தல் வந்தால், புதிது, புதிதாக கட்சிகள் வரும். அதை பற்றி விமர்சிக்க நான் விரும்பவில்லை. ஆனால் அப்படி வரக்கூடிய கட்சிகள் வாய்க்கு வந்த படி வாக்குறுதிகளை அள்ளி வீசி கதைகளை அளந்து விடுவார்கள். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஜி.வெங்கட்ராமன், செஞ்சி ராமச்சந்திரன், வேங்கட பதி, ஆதி.சங்கர் எம்.பி., சட்டமன்ற உறுப் பினர்கள் புஷ்பராஜ், திருநாவுக்கரசு, அங்கையற் கண்ணி, கண்ணன், உதய சூரியன், சிவக்குமார், மாவட்ட அவைத்தலைவர் மஸ்தான், ஊராட்சிகுழு துணை தலைவர் மைதிலி ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சேதுநாதன், நகர்மன்ற தலைவர் பூபாலன், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் ராஜா ராம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், மயிலம் ஒன்றிய குழு தலைவர் மலர்மன்னன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமணன், முஸ்லீம் லீக் மக்கள் கழக நிறுவனர் தலைவர் ஜைனுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுவாக தேர்தல் வந்தால், புதிது, புதிதாக கட்சிகள் வரும். அதை பற்றி விமர்சிக்க நான் விரும்பவில்லை. ஆனால் அப்படி வரக்கூடிய கட்சிகள் வாய்க்கு வந்த படி வாக்குறுதிகளை அள்ளி வீசி கதைகளை அளந்து விடுவார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு மக்களுக்கு அளித்த அந்த உறுதிமொழிகளை நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால் நாம் தேர்தலில் தந்த வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். முன் எப்போதும் இல்லாத வகையில் நம்முடைய இந்த ஆட்சிகாலத்தில் தான் 11 இடைத்தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம். ஆனால் இந்த 11 இடைத்தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம் என்று சொன்னால், அதற்கு தலைவர் கலைஞரின் சாதனை திட்டங்கள் தான் காரணம். அவை மக்களிடம் போய் சென்றடைந்து இருக்கிறது. மக்கள் அதை மனப் பூர்வமாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் தான் இடைத்தேர்தலில் நாம் அடைந்த வெற்றிகள். வரக்கூடிய சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் நாம் மாபெரும் வெற்றியை பெறப்போகிறோம் என்பதை மறுக்க முடியாது. அனைத்து ரேசன்கார்டு தாரர்களுக்கும் இலவச கலர் டி.வி.க்களை ஒரே நேரத்தில் வழங்க முடியாது. கலர் டி.வி ஏனெனில் ஒரு கோடியே 80 லட்சம் டி.வி.க்கள் தேவைப்படுகிறது, அதை வாங்க நிதி ஒரு பிரச்சினையே இல்லை, ஆனால் இந்த டி.வி.க்கள் இந்தியாவில் இருந்து மட்டும் கொள்முதல் செய்யப்படவில்லை, வெளிநாடுகளில் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே ஒவ்வொரு கட்டமாக டி.வி. வழங்கி வந்து கொண்டு இருக்கிறோம். இதுவரை 5 கட்டமாக டி.வி. வழங்கப்பட்டு உள்ளது. இப்போது 6-வது கட்டமாக வழங்குவதற்கு டி.வி.க்களை கொள்முதல் செய்ய அரசாணை வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களுக்குள் டி.வி.க்கள் வந்து விடும். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள் டி.வி.க்களை வழங்க முயற்சி எடுத்து வருகிறோம். ஒருவேளை டி.வி. கொள்முதல் செய்வதில் இடையூறு ஏதும் ஏற்பட்டால், டி.வி. வழங்கப்பட வேண்டிய பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த ஆட்சி தொடரப்போகிறது. அப்போது இந்த அட்டையை வைத்து இருக்கிறவர்களுக்கு டி.வி. வழங்கப்படும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு நாள் கூலி 100 ரூபாய் வழங்கப்படுவதாக பொன்முடி சொன்னார். சமீபத்தில் இந்த கூலியை மத்திய அரசு உயர்த்தி அறிவிக்கை வெளியிட்டு உள்ளது. எனவே விரைவில் இத்திட்டத்தில் வழங்கப்படும் ஒரு நாள் கூலி 119 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்பட போகிறது. இத்திட்டம் தமிழகத்தில் சீரிய முறையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில், நீங்கள் தொடர்ந்து கலைஞர் அரசுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். முன்னதாக விழுப்புரம் மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக ஒரு கோடியே 1 லட்சத்து 11 ஆயிரத்து 11 ரூபாயையும், தங்க வாளையும், வெள்ளி கதாயுதத்தையும் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஜி.வெங்கட்ராமன், செஞ்சி ராமச்சந்திரன், வேங்கட பதி, ஆதி.சங்கர் எம்.பி., சட்டமன்ற உறுப் பினர்கள் புஷ்பராஜ், திருநாவுக்கரசு, அங்கையற் கண்ணி, கண்ணன், உதய சூரியன், சிவக்குமார், மாவட்ட அவைத்தலைவர் மஸ்தான், ஊராட்சிகுழு துணை தலைவர் மைதிலி ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சேதுநாதன், நகர்மன்ற தலைவர் பூபாலன், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் ராஜா ராம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், மயிலம் ஒன்றிய குழு தலைவர் மலர்மன்னன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமணன், முஸ்லீம் லீக் மக்கள் கழக நிறுவனர் தலைவர் ஜைனுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.