மறுவாக்குப் பதிவில் 83 % வாக்குப் பதிவு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப். 16- தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13-ந்தேதி நடந்தது. சராசரியாக 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. தேர்தலின்போது நெய்வேலி, கிள்ளியூர், திருவிடைமருதூர், ஆரணி, போடிநாயக்கனூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 தொகுதிகளில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் முறைகேடு மற்றும் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வாக்குசாவடியில் மறு வாக்குபதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. 13-ந் தேதி தேர்தலின்போது வாக்காளர்கள் எந்த ஆவணத்தை காட்டி வாக்களித்தார்களோ, அந்த ஆவணங்களை காட்டி வாக்களித்தனர். அப்போது வாக்களர்களின் இடது கை சுட்டு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. இன்று வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்பட்டது. 8 வாக்குச் சாவடிகளிலும் விறுவிறுப்பாக ஒட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மறு ஓட்டுப்பதிவை முன்னிட்டு 8 வாக்குச் சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு அமைதியாக நடைபெற வசதியாக அந்த பகுதியில் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இது தவிர அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்கள், கடை வீதிகள், பொதுமக்கள் கூடுமிடங்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை முதலே ஆர்வத்துடன் மக்கள் வாக்களிக்கத் தொடங்கினர். அது மாலை வரை சுறுசுறுப்புடன் நீடித்தது. இறுதியில் இந்த 8 வாக்குச்சாவடிகளலும் மொத்தமுள்ள வாக்காளர்களில் 83.0 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன .
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.