சென்னையில் ஓட்டு எண்ணும் இடங்களில் கூடுதலாக பாதுகாப்பு பணியில்-10 கம்பெனி ராணுவத்தினர்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னையில் ஓட்டு எண்ணும் இடங்களில் கூடுதலாக பாதுகாப்பு பணியில்-10 கம்பெனி ராணுவத்தினர் சென்னை, ஏப். 18- சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுகள் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகம் ஆகிய 3 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதில் லயோலா கல்லூரியில் திரு.வி.க.நகர், கொளத்தூர், எழும்பூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, பெரம்பூர் ஆகிய 7 தொகுதிக்கான ஓட்டு இயந்திரங்கள் உள்ளன. ராணிமேரி கல்லூரியில் துறைமுகம், சேப்பாக்கம், ராயபுரம், ஆர்.கே.நகர் ஆகிய 4 தொகுதி ஓட்டுகளும், அண்ணா பல்கலைக் கழகத்தில் தி.நகர், மயிலாப் பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிக்கான ஓட்டு எந்திரங்களும் பாதுகாப்பாக உள்ளது. மே 13-ந்தேதிதான் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் அதுவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டுப்பெட்டி உள்ள அறைக்கதவு அருகே ராணுவப் படையைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 2-வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரும், 3-வது அடுக்கில் ஆயுத படை போலீசாரும் 4-வது அடுக்கில் லோக்கல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் 3 உதவி கமிஷனர்கள், 7 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள், 36 தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், 40 ஆயுதப்படை போலீசார், 50 உள்ளூர் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 100 எல்லை பாதுகாப்பு படை (துணை ராணுவம்) வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் 17 கம்பெனி போலீசார் 4 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 10 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் (100 பேர்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 ஷிப்டுகளாக இவர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.