பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம்; தேர்தல் முடிவுக்கு பிறகு வெளியாகும்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப்.17- தமிழகம் மற்றும் புதுவையில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 545 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளனர். மார்ஸ் மாதம் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தேர்வு நடந்தது. தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடக்கிறது. ஆங்கிலம் மற்றும் மொழிப்பாட விடைத்தாள்கள் மட்டும் இன்னும் திருத்தி முடியவில்லை. இப்பணிகள் 20-ந்தேதி வரை நடக்கும். வழக்கமாக மே 2-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு மே 14-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டில் அதே தேதியிலோ அதற்கு முன்னதாகவோ வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 7 லட்சம் மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் பதிவு செய்து சரிபார்த்து பின்னர் ?டேட்டா சென்டர்? மூலம் மார்க் பட்டியல் தயாரிக்க குறைந்தது 20 நாட்கள் ஆகும். சட்டசபை தேர்தல் முடிவும் மே 13-ந்தேதி வெளியாகிறது. எனவே 14-ந்தேதிக்கு முன்னதாக வெளியிட வாய்ப்பில்லை. தேர்வு முடிவுகள் எதிர்பாராத விதமாக தேர்ச்சி சதவீதம் குறைந்து இருந்தால் அதுபற்றி அரசிடம் தேர்வுத்துறை ஆலோசிக்கும். வழக்கமாக ஒரு மதிப்பெண் முதல் 5 மதிப்பெண் வரை குறைவாக பெற்று தோல்வியை தழுவும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்களை போட்டு அரசு கரையேற்றி விடும். இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால் புதிய அரசு அமைந்தபிறகு புதிதாக பொறுப்பேற்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் ஆலோசனை பெற்ற பிறகு தேர்வு முடிவை வெளியிட முடிவு செய்துள்ளனர். எனவே பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் கடைசி வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.