மாணவர்களுடன் கலைஞர் கலந்துரையாடல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப்.18- சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முதல் அமைச்சர் கலைஞர் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது நூலகத்திற்கு வருகை தந்தவர்கள் மற்றும் மாணவர்களிடம் முதல் அமைச்சர் கலைஞர் கலந்துரையாடினார். சென்னை கோட்டூர்புரத்தில் சுமார் 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் உலக தரத்தில் கட்டப்பட்டுள்ளது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகள், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தின் அனைத்து பணிகளும் முழுமையடைந்து உள்ளதால் மாணவர்கள், மகளிர், சிறுவர் என கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனையொட்டி முதல் அமைச்சர் கலைஞர், கோட்டூர்புரம் நூலகத்தை நேரில் பார்வையிட்டார். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகள், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், பார்வையற்றோருக்கான தனி நூலக பிரிவு, செம்மொழி ஆய்வகம் ஆகியவற்றின் அரங்குகளை பார்வையிட்டார். அப்போது நூலகத்திற்கு வருகை தந்தவர்கள் மற்றும் மாணவர்களிடம் முதல் அமைச்சர் கலைஞர் கலந்துரையாடியதுடன், நூலகத்தில் உள்ள வசதிகளை கேட்டறிந்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.