நண்டு மசாலா

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தேவையான பொருள்: நண்டு - அரை கிலோ பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 பச்சை மிளகாய் - 4 பூண்டு - 6 பல் இஞ்சி - அரை அங்குலம் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மல்லித்தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி புளி - நெல்லிகாய் அளவு சோம்பு, சீரகம், மிளகு - தலா ஒரு தேக்கரண்டி தேங்காய் - 4 சில் எண்ணெய் - 4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க; பட்டை - ஒன்று கிராம்பு - ஒன்று பிரிஞ்சி இலை - சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி செய்யும் முறை: தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் 5 சின்னவெங்காயம் சேர்த்து அரைக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு நண்டு சேர்த்து கிளறி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். அதில் உப்பு சேர்த்து அரைத்த மசாலாவையும் போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்து நண்டு வெந்தவுடன் இறக்கவும்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.