ஜெயலலிதா மீது கருணாநிதி 2 அவதூறு வழக்கு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,ஏப்.20- முதல் - அமைச்சர் கருணாநிதி சார்பில் சென்னை செசன்சு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது 2 அவதூறு வழக்குகள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில் கூறி இருப்பதாவது:- ஏப்ரல் மாதம் 13-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. பலமாக உள்ள தொகுதிகளை கண்டறிந்து மத்திய மந்திரி ஒருவர் அரசு அதிகாரிகள் துணையுடன் தி.மு.க. ரவுடிகளை கொண்டு மிகப்பெரிய வன்முறையை தேர்தலின் போது கட்டவிழ்த்து விட திட்டமிட்டுள்ளது என்றும், மறுநாள் வெளியான அறிக்கையில் துணை ராணுவத்தினருக்கு ரூ. 300 தினப்படியை முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரில் தலைமை செயலாளர் கொடுக்க மறுப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும், இதனால் துணை ராணுவத்தினர் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாகவும், எனவே சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் இந்த அறிக்கை தமிழக அரசுக்கும், முதல் - அமைச்சருக்கும் களங்களம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே ஜெயலலிதாவை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.