யுனிவர்செல் கம்பெனி தலைவர் கருணாகரன் இல்லத் திருமணம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை யுனிவர்செல் கம்பெனி குரூப்பின் தலைவர் கே. கருணாகரன் இல்லத் திருமண விழா சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் ஏப்-17 ஞாயிறன்று வெகு விமர்சயாக நடைபெற்றது. சென்னை மாநகர மேயர் மா.சுப்ரமணியன் மற்றும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். காஞ்சி மாவட்டம் வேலியூர் கிராமத்தை சேர்ந்த யுனிவர்செல் குரூப் ஆப் கம்பெனியின் தலைவர் கே. கருணாகரன்-சாந்தி தம்பதியரின் மகன் அருண்குமாருக்கும், தஞ்சை மாவட்டம், கருந்தட்டாங்குடி கீழ்வாசலை சேர்ந்த லட்சுமணன்-ஜமுனா தம்பதியரின் மகள் ஸ்ரீநித்யாவிற்கும் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருமண விழாவில் சென்னை மேயர் மா.சுப்ரமணியன், வாலாஜாபாத் தி.மு.க ஒன்றிய செயலாளர் எம். வேதாச்சலம், சேத்துப்பட்டு தி.மு.க ஒன்றியச்செயலாளரும் ஸ்ரீ ராமஜெயம் கல்வி நிறுவனங்களின் தலைவருமான சி.ஏழுமலை உள்பட் ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்களும், நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். விழாவிற்கு வந்தவர்களை E.யுவராஜ் என்ற சுரேஷ், அனிதா யுவராஜ், அஸ்விதா யுவராஜ், பிரஸிதா யுவராஜ், எல்.பரணிபாண்டியன் ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.