தமிழ்நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் விமான டிக்கெட் வாங்கலாம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

விமானம், ரெயில், பஸ், சினிமா டிக்கெட் முன்பதிவு, டி.டி.எச். ரீசார்ஜ் உட்பட பல்வேறு சேவைகளை மக்களுக்கு பீம் நிறுவனம் ஆற்றி வருகிறது. பீம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், செல்போன் மூலம் இதுபோன்ற பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு ஒரு கோடியே 40 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.இந்த நிலையில் தபால்துறையுடன் இணைந்து அடுத்தகட்ட சேவையில் பீம் நிறுவனம் இறங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 100 தபால் நிலையங்களில் விமான டிக்கெட்டுகளை பயணிகள் பெற்றுக் கொள்ளும் வசதியை பீம் நிறுவனம் தொடங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட்டுகளை பயணிகள் பெற்றுக் கொள்ளலாம்.சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்தவர்கள், அண்ணாசாலை, பொது தபால் நிலையம், தியாகராயநகர், மைலாப்பூர், பரங்கிமலை, பூக்கடை, அண்ணாநகர், தாம்பரம், அம்பத்தூர், ஆவடி கேம்ப், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்களில் இந்த சேவையை பெறலாம்.இந்த தகவலை பீம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.