ஈஸ்டர் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப்.23- ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:- கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒரு நாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது. மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடி துடித்து வாடும் ஈழத் தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும். விடியல் உதிக்கும் கொடியவன் ராஜபக்சே கூட்டம் அனைத்துலக நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் எனும் நம்பிக்கையோடு, ஈழத் தமிழரின் துன்பத்தைப் போக்கவும், சுதந்திர தமிழ்ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து செய்தி வருமாறு:- மதவெறியை மாய்த்து மனிதநேயம் தழைக்க ஈஸ்டர் திருநாள் ஒரு இன்பத் திருநாளாக மலரட்டும், ஏழைகளுக்கு செய்யும் தொண்டு, இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். ?இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே? என்பது தே.மு.தி.க.வின் தாரக மந்திரமாகும். இந்நாளில் கிறிஸ்துவ சமுதாயத்தை சார்ந்த அனைத்து மக்களுக்கும் என் இதயமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு:- நசுக்கப்பட்டு, நலிந்த மக்களின் மீட்புக்காக சிலுவையில் அறையப்பட்டு ரத்தத்தை சிந்தி தன் இன்னுயிரை ஈந்த ரட்சகர் இயேசு பிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ பெருமக்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. வேதவாக்கின்படியே அவர் ரத்தம் சிந்தி மறைந்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததால் பூமியில் நியாயமும், தர்மமும், வெல்லும் என்பதை மாந்தருக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது. இயேசு ரட்சகர் உலகுக்கு அளித்த சத்திய, வேத வசனங்களை மனதில் ஏற்று நாட்டில் சாதி, மத, பேதங்களை மறந்து அனைவரிடையேயும் நல்லிணக்கம் மேம்பட, அமைதி, மகிழ்ச்சி பெருகி ஓங்கிட ஒற்றுமை ஒருமைப்பாட்டு உணர்வோடு ஒன்றிணைந்து உழைப்போம் என்று உறுதியேற்போம். பெருந்தலைவர் மக்கள் கட்சியின் அமைப்பாளர் என்.ஆர்.தனபாலன்:- இயேசு கிறிஸ்துவின் இரு பக்கங்களிலும் இரு கள்ளர்கள், ஒருவன் இயேசுவை இகழ்கின்றான், மற்றவனோ புகழ்கின்றான். அந்தக் கடைசி வேளையில் இரு திருடனின் உள்ளம் திறக்கப்படுகிறது. மறு திருடனின் உள்ளமோ இறுமாப்படைகிறது. ஆகையால் பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்வதற்கு ஒருவன் தயார் நிலையில் இருக்கின்றான். நாமும் தவகாலக்கட்டங்களில் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து மனம் திறந்த அந்த கள்ளனை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நல்ல நாளில் அவருடைய அன்பையும், தாழ்மையையும் கற்றுக் கொள்வோமாக. புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் வாழ்த்து:- ஈஸ்டர் திருநாளன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின் றன. கிறிஸ்தவ பெருமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு, பிரார்த்தனைகளில் ஈடுபட்டு ஏசுபிரானை வழிபடுகின்றனர். உலகின் அதிகளவு மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில், அதிக அளவு மக்கள் இந்துக்களாக இருந்தாளும், சிறுபான்மை மதத்தினராகிய கிறிஸ்தவர்களின் திருவிழாக்களிலும் கலந்து கொண்டு சமத்துவத்தை கடைபிடிக்கின்றனர். நம்நாட்டில் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் ?ஈஸ்டர்? திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.