சாய்பாபா மரணம்: விஜயகாந்த் பொன்.ராதா கிருஷ்ணன் இரங்கல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப். 24- சாய்பாபா மரணமடைந்தையொட்டி தலைவர்கள் இரங்கல் செய்தி விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:- சாய்பாபா தனக்கென மட்டும் வாழாமல் இந்த நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பல நற்பணிகளை ஆற்றி உள்ளார். அவர் பெயரால் இயங்கும் அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் உலகமே பயன்பெறும் அளவிற்கு அவர் சேவை செய்துள்ளார். சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா ஆற்றிலிருந்து பெறப்படும் தண்ணீருக்கு பெரும் செலவில் சாய்பாபா கால்வாய் அமைத்து தந்தார் என்பதை தமிழ்நாடு என்றும் மறக்காது. அந்த அளவுக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதில் அவர் ஆர்வம் கொண்டவர். இவரது இழப்பு நமக்கும், நம்முடைய நாட்டிற்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது மறைவால் துயருரும் அவர் மீது பற்று கொண்டோர் அனைவரும் ஆறுதல் அடையவும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தலைவர் சேதுராமன்:- ஆன்மீக துறையில் இருந்தாலும் ஏழை எளிய மக்களின் நலன் குறித்து மிக அதிக அக்கறைகாட்டி மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் பெரிய அளவில் நிதி உதவி செய்துள்ளவர் சாய்பாபா. அவரது மறைவால் துயரப்படும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் அவரது நிர்வாகிகளுக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:- தெய்வம் மனிதனாக அவதாரம் எடுக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் நமது வாழ்நாளில் நம் கண்முன்பு அவதார புருஷராக மகான் சாய்பாபா நம்மை அருள்பாலித்து உலா வந்தார். தன்னை அணுகியவர்களுக்கும், அணுகாதவர்களுக்கும் அருள்பாலித்த பெருமை சத்ய சாய்பாபாவையே சாரும். தெய்வ வழிபாட்டில் மட்டுமல்லாமல் சமுதாய பணியிலும் கோடிக்கணக்கான பக்தர்களை ஈடுபட வைத்தார். சென்னை மக்களின் தாகம் தீர்க்க கிருஷ்ண நதிநீரை கொண்டுவர கோடிகணக்கில் நிதி உதவி வழங்கினார். தன்னை போற்றுவோரையும், தூற்றுவோரையும் சமமாக பாவித்த அவதார புருஷர் சாய்பாபா. அவரது பூலோக வாழ்க்கையின் பூர்த்தி பக்தர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தாலும் அவரது அருளாசி நம்மை வாழ்த்தும். இறைவனோடு ஐக்கியமாகிவிட்ட சாய்பாபா என்றும் நமக்கு வழிகாட்ட பிரார்த்திக்கிறேன்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.